BEST SIDDHA PRESCRIPTIONS OF OUR GURU DR.L.MAHADEVAN
Product details
சித்த மருத்துவ துறையில் நான் சிகிச்சை செய்ய இறங்கிய பொழுது ஒவ்வொரு மருந்தையும் நன்றாக ஆராய்ந்து அதை சுவைப்படி வேறுப்படுத்தி கொடுத்து வந்தேன்.
வறண்ட இருமல் என்று வந்தால் அங்கு அதிமதுரமும், Productive Cough என்று வந்தால் அங்கு தாளிசபத்ராதி வடகமும் கொடுத்து வந்தேன். பித்தம் சார்ந்த நோய்களுக்கு வெள்ளியும், வாதம் சார்ந்த நோய்களுக்கு தங்கமும் கொடுத்து வந்தேன். பொதுவாக சித்த மருத்துவத்தில் தனி பித்தத்திற்கு மருந்தின் அளவு குறைவு. வாத கபம், கப வாதம் இவற்றின் சேர்க்கைக்கான மருந்துகள் அதிகம். இந்த நிலையில் ஒரு நோயை ஆராயும் பொழுது இது எந்த இடத்தில் வருகிறது? அந்த இடத்தில் உள்ள தோஷம் என்ன? அந்த இடத்தில் உள்ள தாது என்ன?
இரண்டிற்கும் பொதுவான சுவை என்ன? அந்த சுவையில் உள்ள மருந்துகள் என்ன?
அது எந்த வீர்யத்தில் எடுக்க பட வேண்டும் போன்ற தத்துவப்படி மருந்து சொல்லி
கொடுப்பேன். இதற்கு Logic என்று பெயர். எனது சம்பிரதாயத்தில் இது எனது தாத்தா கொடுத்தார், அதனால் நான் கொடுக்கிறேன் என்று நான் சொல்வதில்லை. ஒரு விஞ்ஞானியால் அவ்வாறு சொல்ல முடியாது. என் தாத்தா கொடுத்தது சரியாக இருந்திருக்கலாம். எனது தாத்தா என்று உதாரணத்திற்கு சொல்கிறேன். ஏன், எதற்கு, எப்படி என்று நமது தத்துவப்படியே விளக்கி சொல்லிக் கொடுக்க வேண்டிய ஒரு நிலையில் நாம் இருக்கிறோம். அந்த புரிதல் இல்லாததே இந்த தேக்க நிலைக்கு காரணம் என்று நான் உணர்கிறேன். இது ஆயுர்வேதத்திற்கும்
புரியும், சித்த மருத்துவத்திற்கும் புரியும். இதில் கொடுத்து இருக்கின்ற 120 அத்தியாயங்களை படிக்கின்ற பொழுது மருந்துகளை எவ்வாறு எடுக்க வேண்டும்? என்ன பரிசோதனை செய்ய வேண்டும் அதன் தத்துவார்த்தப் பின்னனி என்ன என்பது உங்களுக்கு ஒரு கோடிட்டு காட்டியது போல் புரியும். மேலும் இதை நீங்கள் வளப்படுத்தி கொள்ளலாம். நான் எழுதிய எல்லா மருந்துகளையும் மொத்தமாக கொடுக்க வேண்டும் என்று அர்த்தம் இல்லை. இதை நான் கொடுத்துப் பார்த்ததில் பலன் உள்ளவை, நம்பிக்கை அளிப்பவை.
நீங்கள் அதை தேர்ந்தெடுத்து கொடுக்கலாம், அந்த உரிமை உங்களுக்கு உண்டு. அதே தத்துவத்தில் வேறு மருந்துகளையும் கொடுக்கலாம். அந்த சுதந்திரமும் உங்களுக்கு உண்டு.
எனவே சித்த மருத்துவத்தில் மணி முத்தாக எனது அனுபவத்தை ஒரு சாறாகப் பிழிந்து உங்களுக்கு கொடுத்துள்ளேன். இதனால் நீங்கள் மிக்க மகிழ்ச்சியடைந்து பலன் பெறுவீர்கள் என்று நம்புகிறேன். எல்லாம் வல்ல அகத்தியரும், சிவபெருமானும் உங்களுக்கு நல்லதையே செய்யட்டும்

Sort by
Newest first
Newest first
Oldest first
Highest rated
Lowest rated
Ratings
All ratings
All ratings
5 Stars
4 Stars
3 Stars
2 Stars
1 Star